பதிவு செய்த நாள்
27
ஜூலை
2018
02:07
நாமக்கல்: நாமக்கல், சாய் தத்தா பிருந்தாவனத்தில் குருபூர்ணிமா உற்சவம் துவங்கியது. நாமக்கல், வகுரம்பட்டி செல்லும் பிரிவு சாலையில் சாய் தத்தா பிருந்தாவன் பிராத்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டபம் உள்ளது. அதில், ஷீரடி சாய் பாபா குருபூர்ணிமா உற்சவம் நேற்று துவங்கியது. காலை, 6:00 மணிக்கு காக்கட் ஆரத்தி, 7:00 மணிக்கு தரிசனம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், விஷ்ணு சகஸ்ர நாமம் மற்றும் ஹனுமந்த் சாலிசா பாராயணம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, மதியம், 12:00 மணிக்கு ஆரத்தி, மாலை, 4:00 மணிக்கு தரிசனம், 6:00 மணிக்கு தூப் ஆரத்தி நடைபெற்றது. இரவு, 7:00 மணிக்கு சென்னை சாய் அருளாளர் மீனாட்சி சுந்தரத்தின் சாய் சுய சரிதை விளக்க சொற்பொழிவு, 8:00 மணிக்கு ஷேஜ் ஆரத்தி நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு காக்கட் ஆரத்தி, 7:00 மணிக்கு தரிசனம்; 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்; 10:00 மணிக்கு விஜயலட்சுமி வெங்கடேஷ் குழுவினரின் சாய் பஜன்; மாலை, 6:00 மணிக்கு ஆரத்தி; 7:00 மணிக்கு சாய் சத்ய நாராயண பூஜை; இரவு, 8:00 மணிக்கு ஷேஜ் ஆரத்தி நடைபெறுகிறது.