ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஷீரடிசாய்பாபா கோயிலில் குருபூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணி முதல் ஆரத்தி, அகண்டபாராயணம், உற்ஸவ மூர்த்திக்கு பக்தர்களால் அபிஷேகம் நடந்தன. இதை தொடர்ந்து விக்னஷே்வர பூஜை, சங்கல்பம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பகல் ஆரத்தி அன்னதானத்திற்கு பின் மாலை 4:30 மணிக்கு பவுர்ணமி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சத்திய நாராயண பூஜையை தொடர்ந்து பாபா பல்லக்கு உற்ஸவம், துவாரகாமாயியில் ஊஞ்சல் உற்சவம் பக்தர்களால் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ஷீரடி சாயி சேவா சமிதியினர் செய்தனர்.