பதிவு செய்த நாள்
28
ஜூலை
2018
12:07
உடுமலை: உடுமலையில் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மன் கோவில்களில், சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தன.ஆடி மாதத்தில் அம்மன் அருளைப்பெற, கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. ஆடி மாதம் துவங்கி, இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமியையொட்டி உடுமலை சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் களை கட்டியது. மாரியம்மன் கோவிலில், காலை, 11:00 மணிக்கு உச்சிகாலபூஜை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. ஆடி மாத பவுர்ணமியையொட்டி, மாலையில், விக்னேஷ்வரபூஜை, பூர்வாங்கபூஜை, மகாதீபாராதனை நடந்தது. நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ேஹாமம் நடந்தது.தளி ரோடு காமாட்சியம்மன் கோவிலில், காலை 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் காமாட்சி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளி மற்றும் பவுர்ணமி பூஜையும் நடந்தது. ஆடி மாதத்தையொட்டி, பக்தர்கள், வளையல், தாலிக்கயிறு, கனி, உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தினர்.