சென்னை: சந்திரகிரகணம் எதிரொலியாக, கோவில்களின் அனைத்து பிரகாரங்களும் சுத்தப்படுத்தப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இந்த நுாற்றாண்டின், மிக நீண்ட சந்திர கிரகணம், நேற்று முன்தினம் இரவு, 11:54 மணிக்கு துவங்கி, நேற்று அதிகாலை, 3:49 மணிக்கு நிறைவு பெற்றது. கிரகண காலங்களில், சில மணி நேரத்துக்கு முன், கோவில் நடை மூடப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, சென்னை நகரில் உள்ள கோவில்களில், விரைவாக நடை மூடப்பட்டன. நேற்று அதிகாலை, நடை திறக்கப்பட்ட போது, கோவில்களின் அனைத்து பிரகாரங்களும் சுத்தப்படுத்தப்பட்டன. சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடத்தப்பட்டது. சந்திரகிரகணம் காரண மாக, அசுவினி, ரேவதி, பூசம், ஆயில்யம், கேட்டை, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பரிகாரம் செய்ய ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களில் குவிந்தனர். பின், பாசி பருப்பு தானம் செய்தனர். கிரகணம் காரணமாக, ஏராளமானோர், நேற்று புண்ணிய நதிகளில் மூதாதையர்களுக்கு தர்ப் பணம் செய்தனர்.