திருக்கனுார்: வாதானுார் முத்துமாரியம்மன் கோவிலில், ஆடிமாத செடல் உற்சவம் நடந்தது. திருக்கனுார் அடுத்த வாதானுார் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆடிமாத செடல் உற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. இதனையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடந்தது. இதில், வாதானுார் கிராமத்தை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் அலகு குத்தி, தேர் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், செடலணிந்தும் சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.