பதிவு செய்த நாள்
02
ஆக
2018
12:08
கோவை:ராமநாதபுரம், கணேசபுரம் போலீஸ் கந்தசாமி வீதியில் உள்ள முனியப்பன், வனபத்ரகாளியம்மன் கோவிலில், இன்று முதல் 4ம் தேதி வரை, ஆடிப்பெருந்திருவிழா நடக்கிறது. கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா, இன்று மாலை, 6:00 மணிக்கு, கங்கணம் கட்டுதலுடன் துவங்குகிறது. இரவு, 7:00 மணிக்கு, கம்பம் நடுதலும், 8:00 மணிக்கு, மகா அபிஷேகம், ஆராதனையும் நடக்கின்றன. நாளை காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை சக்தி கரகம், பால் குட ஊர்வலம், பூவோடு வீதியுலாவும், மாலை, 6:00 மணிக்கு, மகா தீபாராதனையும் நடக்கிறது. ஆக., 4ம் தேதி காலை, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
திருவிளக்கு பூஜை: ஆடி வெள்ளி முன்னிட்டு, குறிச்சி பாதாள கண்டியம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நாளை நடக்கிறது. பொள்ளாச்சி ரோடு, குறிச்சி, உழவர் சந்தை ரோட்டில் அமைந்துள்ளது இக்கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, நாளை மாலை, 6:00 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.