புதுமாவிலங்கை:கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சிக்குட்பட்ட அகரம் கிராமத்தில் அமைந்துள்ள கொல்லாபுரி அம்மன் கோவிலில், இன்று, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 8:15 மணிக்கு, கோபுர விமான கும்பாபிஷேகமும், காலை, 8:30 மணிக்கு கொல்லாபுரி அம்மன் மூலவர் மஹா கும்பாபிஷேகமும் நடைபெறும். இரவு, 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில், கொல்லாபுரி அம்மன் வீதியுலாவும் நடைபெறும். நாளை முதல், 48 நாட்களுக்கு மண்டாலாபிஷேகம் நடைபெறும்.