வேலூர்: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று வாஸ்து ஹோமம் நடந்தது. முரளிதர சுவாமிகள் துவக்கி வைத்தார். தொடர்ந்து, கோ பூஜை, வாஸ்து பகவானுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அஷ்டதிக் பாலகர்களுக்கு, பூஜை, பஞ்ச பூத வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு, வாஸ்து எந்திரம் பிரசாதமாக வழங்கப்பட்டது.