பதிவு செய்த நாள்
02
ஆக
2018
12:08
கிருஷ்ணகிரி: ஆடித்திருவிழாவை முன்னிட்டு, அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை எடுத்து, ஊர்வலமாக வந்தனர். கிருஷ்ணகிரி அடுத்த, அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, காலை, 6:00 மணிக்கு, மகாகணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், துர்காஸீக்த ஹோமம் ஆகியவை நடந்தது. இதையொட்டி, பல்வேறு கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், மாவிளக்கு மற்றும் கரகத்தை எடுத்து, மேள தாளத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். கோவில் முன், 50க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.