பதிவு செய்த நாள்
02
ஆக
2018
12:08
கிருஷ்ணகிரி: சந்தூர் மாங்கனிமலை முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் மாங்கனி மலை வேல்முருகன் கோவில், 49ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா, நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இன்று மற்றும் நாளை, சந்தனகாப்பு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் விஷேச பூஜை நடக்கிறது. 4ல் காலை புஷ்ப அலங்காரம், பரணி சாத்துபடியும், இரவு, 7:00 மணிக்கு, மாங்கனிமலை வேல்முருகன் பூப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு, நகர்வல நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து, 5ல் காலை மாரியம்மன் கோவில் முன், வீரபத்திரசுவாமி பக்தர்களின் சேவ ஆட்ட நிகழ்ச்சியும், பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்தலும் நடக்கிறது. 6ல், சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியுடன், விழா நிறைவடைகிறது.