பதிவு செய்த நாள்
03
ஆக
2018
01:08
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா முன்னேற்பாடு பணி குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில், ஆக., 14 வரை நடக்கவுள்ள விழாவில், பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்தில் மாற்றம், மருத்துவ வசதி, தடையில்லா மின்சாரம், தீயணைப்பு வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக வசதி ஆகியவற்றை, அனைத்து துறை அலுவலர்கள் செய்து முடிக்க, கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார்.