பதிவு செய்த நாள்
30
ஜன
2012
11:01
குறிஞ்சிப்பாடி : வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில், 141வது தைப்பூச ஜோதி தரிசன விழா வரும், 7ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, இன்று (30ம் தேதி) முதல், 1ம் தேதி வரை, தருமசாலையில் மகாமந்திரம் ஓதுதல், 2ம் தேதி முதல், 5ம் தேதி வரை, ஞானசபையில் திரு அருட்பா முற்றோதல் நடக்கிறது. 6ம் தேதி காலை, 7.30 மணிக்கு தருமசாலையில் சன்மார்க்கக் கொடியேற்றுதல், வள்ளலார் அவதாரித்த மருதூரில், அவதார சன்னிதியில் கிராமவாசிகள் சார்பிலும், தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி சன்னிதியில், கருங்குழி கிராம மக்களும் சன்மார்க்கக் கொடியேற்றுகின்றனர். பிப்., 7ம் தேதி காலை 8 மணி, 10 மணி, பகல் 1, இரவு 7, 10 மணிக்கும், மறுநாள் 8ம் தேதி காலை 6 மணிக்கு என, ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. 9ம் தேதி பகல் 12 மணிக்கு, தரும சாலையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடக்கிய பல்லக்கு அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக மேட்டுக்குப்பம் எடுத்துச் சென்று, அங்கு வள்ளலார் சித்தி பெற்ற அறையைத் திறந்து, மாலை 6 மணி வரை திருஅறை தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார், உதவி ஆணையர் ஜெகன்னாதன், நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், அலுவலக உதவியாளர்கள் செய்து வருகின்றனர்.