பதிவு செய்த நாள்
04
ஆக
2018
11:08
பழநி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பழநி பெரியாவுடையார் கோயில் சண்முகநதியில் தற்காலிக தண்ணீர்தொட்டியில் சப்தகன்னிமார், அஸ்திரதேவர் பூஜைகள் நடந்தது. பழநி பெரியநாயகியம்மன், திருஆவினன்குடி, பெரியாவுடையார் கோயில்களில் ஆடிப்பெருக்கு, வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முக்கியநிகழ்ச்சியாக பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து பெரியாவுடையார் கோயிலுக்கு உமாமகேஸ்வரர், உமாமகேஸ்வரி, விநாயகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் புறப்பாடு நடந்தது. மூலவர் பெரியாவுடையாருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சண்முகநதி தண்ணீரில் அமலச்செடிகள் உள்ளதால், படித்துரையில் தற்காலிகமாக தண்ணீர் தொட்டி அமைத்திருந்தனர். அதில் சப்தகன்னிகள் அஸ்திர தேவருக்கு பூஜைகள் நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், டி.எஸ்.பி., விவகோனந்தனன் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கோதைமங்கலம், பாலசமுத்திரம், அ.கலையம்புத்துார், வண்டிவாய்க்கால் உள்ளிட்ட கிராம பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக வந்து சண்முகநதியில் களிமண் எடுத்து அதில் சப்த கன்னிமார்களை செய்து வழிபட்டனர்.