மதுராந்தகம்: மதுராந்தகம் சேற்றுக்கால் பிடாரி செல்லியம்மன் கோவிலில் திருத்தேர் உலா நேற்று நடைபெற்றது. மதுராந்தகம் பிடாரி செல்லியம்மன் கோவிலில் நடந்து வரும் ஆடி உற்சவத்தில், ஊரணிப் பொங்கல் விழா நடைபெற்றது; இரவில் அம்மன் திரு வீதி உலாவும்,திருத்தேர் பவனியும் நடந்தது. செல்லியம்மன் சர்வலங்காரத்துடன் தேரில் மதுராந்தகம் நகரில் உலா வந்தார். மதுராந்தகம் சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர், அம்மனை தரிசித்தனர்.