பதிவு செய்த நாள்
04
ஆக
2018
12:08
திருவள்ளூர்: திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில், ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு, நேற்று காலை, பூங்குழலி அம்மன், பத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. மாலையில், திருத்தேர் உலா வந்தது. இதில், பூங்கா நகர், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை, ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருகப் பெருமானுக்கு, 108 பால்குட அபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும், 13ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பூங்குழலி அம்மன், பத்மாவதி தாயாருக்கு வளையல் அலங்காரம் நடைபெற உள்ளது.