திருப்பரங்குன்றத்தில் ஆடிக்கார்த்திகை: தங்க மயில் வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2018 10:08
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சன்னதி தெரு ஆடிக்கார்த்திகை மண்படத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். இரவு பூஜைகள் முடிந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மூலவர், உற்சவர், சக்திவேலுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பேரவை சார்பில் பாராயணம் நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் முருகனுக்குசிறப்பு பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தன. முருகனுக்கு வைரவேல்: அழகர்மலையில் உள்ள சோலைமலை மண்டபம் முருகன் கோயிலில் ஆடி கார்த்திகையை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் நுாபுரகங்கையில் புனித நீராடினர். முருகன் கோயிலில் மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு வைரவேல், திருஆபரணங்கள் சாத்தப்பட்டுதீபாராதனை நடந்தது. சஷ்டி மண்டப வளாகத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு கும்ப கலச தீர்த்தம், 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. திருப்புகழ் சபையினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அடிவாரத்திலுள்ள கள்ளழகர், பதினேட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதிகளிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்தனர்.