பதிவு செய்த நாள்
06
ஆக
2018
01:08
திருவண்ணாமலை:அங்காளம்மன் கோவில் ஆடி விழாவில், ஒன்பது வடைகள், 17 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள சாந்தமாரியம்மன் கோவில், நவசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில், ஆடிப்பெருக்கு விழா, வசந்த விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில், கொதிக்கும் எண்ணெயில், வெறும் கையால் வடை சுட்டு எடுக்கும் வழிபாடு நடந்தது. இந்த வடையை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் போட்டி போட்டு, அதிக தொகைக்கு வடையை ஏலம் எடுப்பர்.கோவில் விழாக்குழு தலைவர் சேகர் சுவாமி, கொதிக்கும் எண்ணெயில், ஒன்பது வடைகளை, வெறும் கையால் சுட்டு எடுத்தார். முதல் மூன்று வடைகள், தலா, 2,700 ரூபாய், 2,500, 2,300 உட்பட, ஒன்பது வடைகள், 17 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன.