பதிவு செய்த நாள்
07
ஆக
2018
11:08
திருக்கோவிலுார்: வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, காலை 10:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள முருகர் சன்னதியில், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வேண்டுதல் உள்ள பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் மேலதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து சன்னிதானத்தை அடைந்தது. 11:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் விக்னஷே்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சாசன பூஜை, பஞ்சஆவண பூஜை, மூலவர் வள்ளிதேவ சேனா சமேத ஆறுமுக பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. பகல் 1:15 மணிக்கு, விபூதி அலங்காரத்தில் சோட சோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.