பதிவு செய்த நாள்
08
ஆக
2018
12:08
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில், ஏராளமானோர் குடும்பத்துடன் பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். ஆடித்திருவிழாவை முன்னிட்டு, சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், பொங்கல் வைக்கும் விழா, நேற்று நடந்தது. ஏராளமானோர், குடும்பத்துடன் வந்து, பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். இன்றும், பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு நடக்கிறது. நாளை, பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபி?ஷகம், அலங்கார ஆராதனை, அன்னதானம் ஆகியவை நடக்கிறது.