நீலமங்கலத்தில் கருணாநிதிக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2018 02:08
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் சிவன் கோவிலில் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ தினமான நேற்று மாலை வழிபாடு நடந்தது. நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்த பின், மலர் மாலை அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின், மறைந்த தி.மு..க., தலைவர் கருணாநிதிக்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.