பதிவு செய்த நாள்
13
ஆக
2018
01:08
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள கோவில்களில், உண்டியல் வைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், ஏராளமான சிவன் கோவில், பெருமாள் கோவில் அமைந்து உள்ளன. இந்த கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், பல கோவில்களில் உண்டியல் வைக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் காணிக்கையை கோவிலுக்கு செலுத்த முடியவில்லை. எனவே, இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், உண்டியல் வைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.