பதிவு செய்த நாள்
17
ஆக
2018
12:08
நாமக்கல்: நாமக்கல்லில், ஆடி சஷ்டியை முன்னிட்டு, முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். நாமக்கல் - மோகனூர் சாலை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு அபி?ஷகம் நடந்தது. வெண்பட்டு உடுத்தி, ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதே போல், உற்சவர் பாலதண்டாயுதபாணி சுவாமி, வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்ரமணியர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
* நாமக்கல், கடை வீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.