பதிவு செய்த நாள்
18
ஆக
2018
12:08
நாகர்கோவில், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.கன்னியாகுமரி மாவட்டத்தில், புகழ்பெற்ற சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமை பதியில், ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில், 11 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடப்பதுவழக்கம்.இந்த ஆண்டு ஆவணி திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் நாள் திருவிழாவான நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்து பதமிடுதலும், 4:30 மணிக்கு பணிவிடை, 5:00 மணிக்கு கொடியேற்றத்திற்கு குரு அழைப்பு நிகழ்ச்சிகளும் நடந்தன.காலை, 6:00 மணிக்கு பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகள் தலைமை வகித்து திருக்கொடியை ஏற்றினார். காலை, 7:00 மணிக்கு அய்யா தொட்டில் வாகன பவனியும், மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது.கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால்,இந்தாண்டு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில், ஆவணி திருவிழாவில் பங்கேற்கும் கேரள பக்தர்கள் வருகை, குறைந்து காணப்படும் வாய்ப்புள்ளது.