சிறுவந்தாடு பெருமாள் கோவிலில் முத்தங்கி சமர்ப்பண விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2018 12:08
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், முத்தங்கி சமர்ப்பண பெருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, கடந்த 16ம் தேதி காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து, நேற்று 17ம் தேதி, காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜையும், காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜை துவக்கம் புண்யாகம், அக்னி பிரதிஷ்டை, கலச பூஜை மிக விசேஷ ஸூக்த ஹோமங்கள் நடந்தன. காலை 8:30 மணிக்கு முத்தங்கி சிறப்பு பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, காலை 10:30 மணிக்கு கடப்ரோக் ஷனம் முத்தங்கி சமர்ப்பண விசேஷ சாற்று முறை நடந்தது. விழாவில், உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.