தரைக்குடி உமையநாயகி அம்மன் கோயிலில் முதல் பார்வை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2018 12:08
சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் உமையநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஜூலை 17 (செவ்வாய்) ஆடி 1 அன்று அதிகாலையில் கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு உமையநாயகி அம்மன் கோயிலின் மூலஸ்தான கதவு திறக்கப்பட்டு, ஆவணி முதல் தேதியை முன்னிட்டு, அம்மனின் முதல் பார்வை நிகழ்ச்சி நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. கோயில் விழாக்கமிட்டியினர் கூறியதாவது; பொதுவாக அம்மன் கோயில்களில் ஆடிமாதம் விசஷே மாதமாக கருதப்படும். இங்குள்ள மூலவருக்கு மட்டும் ஆடியில் கோயில் நடை சாத்தப்பட்டு, உமையநா-யகி அம்மன் ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராட செல்வதாக காலங்காலமாக ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆவணி 1ம் தேதி முதல் பார்வை நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர், என்றனர்.