பதிவு செய்த நாள்
20
ஆக
2018
11:08
திண்டிவனம்: திண்டிவனம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவை முன்னிட்டு, விளக்கு பூஜை நடந்தது. திண்டிவனம் இலுப்பைதோப்பிலுள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் ஆடித்திருவிழா நடந்து வந்தது. மூன்றாவது உற்சவம், சாணக்யா கல்விக்குழுமம் மற்றும் 28 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன் தலைமையில் நடந்தது.மூன்றாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மருவத்தூர் ஓம்சக்தி குழுவினரால், சிறப்பு விளக்கு பூஜையும் நடந்தது. நிகழ்ச்சியில், பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகி ராதாகிருஷ்ணன், அரிமா சங்கம் அன்னை சந்தானம், வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.