Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீநிவாச திருக்கல்யாண ... திருச்செந்தூரில் கிரிபிரகார மண்டபம் உபயதாரர்கள் ஆர்வம்; அரசு மந்தம் திருச்செந்தூரில் கிரிபிரகார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகை உற்சாகத்தில் கேரள மாநில மக்கள்
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகை உற்சாகத்தில் கேரள மாநில மக்கள்

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
08:08

திருவனந்தபுரம்: கடும் மழை, வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ஏதுமில்லை. ஆனாலும், பண்டிகைக்கான உற்சாகம் மாநிலம் முழுவதும்  பரவலாக காணப்பட்டது. ஓணம், பண்டிகை, உற்சாகம், கேரளா, மக்கள் கேரளாவில் தொடர்ந்து பல நாட்கள் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள்  பாதிக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர், வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது மீண்டு வரும்  கேரளாவில், இந்த ஆண்டு, ஓணம் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் நடத்தப் படாது என, மாநில அரசு அறிவித்தது.ஓணம் பண்டிகைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 30கோடி ரூபாய், நிவாரண  பணிகளுக்கு செலவிட படும் என,முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந் தார். வீடுகளில் புகுந்த வெள்ள நீர்மற்றும் சேற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் பல இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீர், முறிந்து விழுந்த மரங்கள், நிலச்சரிவு உள்ளிட்ட வற்றை அகற்றும் பணியும் வேகமாக நடந்து வரு கிறது.பெரிய அளவில் கொண்டாட்டங் கள்  இல்லாத போதும்,மாநிலம் முழுதும், நேற்று, ஓணம் பண்டிகையை, வழக்கமான உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடினர். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள வர்கள், அங்கேயே பண்டிகையைக்  கொண்டாடினர். மாநிலத்தில் உள்ள கோவில்களில், வழக்கமான அத்தப்பூ கோலம் உள்ளிட்ட அலங் காரங்களும், விளக்கு அலங்காரங்களும் செய்யப்படவில்லை. பம்பையில் வெள்ளம் கரை புரண்டு  ஓடுவதால், புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மலைப் பாதை சேதமடைந்துள்ளதால், அங்கும் எந்தக் கொண்டாட் டங்களும் நடைபெறவில்லை.

ஓணம் பண்டிகையையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்,கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  உள்ளிட்டோர், கேரள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.அதில், மிகப் பெரிய துன்பத்தில் இருந்து மீண்டு வருவதற்கு, இந்தப் பண்டிகை உற்சாகத்தை அளிக்கும் என, நம்பிக்கை  தெரிவித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த, ஆப்பிள் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனம், கேரள மழை, வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக, ஏழு கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து  உள்ளது. கேரளாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, மெர்சி கார்ப்ஸ் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு, இந்த நன்கொடை அளிக்கப்  படுவதாக, அந்த நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இதைத் தவிர, ஆப்பிள் மொபைல் போன்களில் உள்ள ஐ டியூன்ஸ் மற்றும் ஆப் ஸ்டோர் மூலம், கேரளாவுக்கு  நன்கொடை அளிப்பதற்கான சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி, திருவெண்காடு, பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar