புதுச்சேரி: புதுச்சேரியில், யஜூர் வேதத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு, ஆவணி அவிட்ட பூணுால் மாற்றும் வைபவம் நேற்று நடந்தது. புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில், கீதாராம் குருக்கள் தலைமையில் நடந்த வைபவத்தில், 250க்கும் மேற்பட்டோர் பூணுால் அணிந்து கொண்டனர்.காலை 9:00 மணிக்கு, மகா சங்கல்பத்துடன் பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் பூஜை, ஹோமங்கள், பூணுால் அணியும் வைபவம், வேதாரம்பம் ஆகியன நடந்தது.