சேலம்: சேலத்தில், அழகிரிநாத சுவாமி நேற்று ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், பிரசித்தி பெற்ற அழகிரிநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு காலை, 6:00 மணிக்கு பூஜை நடந்தது. பின்னர் சுவாமிக்கு அபி?ஷகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கும், அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து வடை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது.