பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
விழுப்புரம்: ஆவணி அவிட்டம் நட்சத்திரத்தை முன்னிட்டு, விழுப்புரத்தில் பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. ஆவணி மாதம் பவுர்ணமி மற்றும் அவிட்டம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் பிராமணர்கள் உள்ளிட்ட சில பிரிவினர்கள் பூணுால் அணிவது வழக்கம். அதன்படி, நேற்று ஆவணி அவிட்டம் நட்சத்திரத்தை முன்னிட்டு பூணுால் அணியும் நிகழ்ச்சி விழுப்புரம் சங்கரமடத்தில் நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணி முதல் யாகம், பூஜைகள் செய்து, நுாற்றுக்கணக்கான பிராமணர்கள் கலந்து கொண்டு, ேஹாமம் செய்து பூணுால் அணிந்து கொண்டனர். இதேபோன்று, விழுப்புரம் சிவன் கோவிலில், வாணிய செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று, பூணுால் அணிந்து சென்றனர். கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் ஆகியவற்றில் ஆவணி அவிட்டத்தையொட்டி யஜுர் வேத சம்பிரதாயப்படி பூனுால் மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. ஆவணி அவிட்ட தினத்தன்று பிராமணர்கள், ஆர்ய வைசியர்கள், விஸ்வகர்மாவினர், வாணிய செட்டியார் சமூகத்தினர் அனைவரும் கோவிலுக்கு சென்று விநாயகர் வழிபாடு நடத்தி, கலச பூஜைகள் செய்த பின், வேத விற்பன்னர்கள் பூனுால் மாற்றும் நிகழ்ச்சியினை மந்திரங்கள் வாசித்து செய்து வைத்தனர்.