பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடி தேர்த்திருவிழா, கடந்த ஜூலை, 13ல், முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழா நிறைவாக நேற்று, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு கணபதி பூஜை, 10:00 மணிக்கு பால்குட திருமஞ்சன ஊர்வலம் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. மதியம், அம்மனுக்கு அபி?ஷகம், தீபாராதனை செய்து, பக்தர்கள் வழிபட்டனர். இரவு, 8:00 மணியளவில் பெண்கள், 108 திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். உற்சவர் செவ்வை மாரி, ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில், அருள்பாலிக்க, உடனுறை மகாலஷ்மி, சரஸ்வதி காட்சியளித்தனர். கோவில் குருக்கள், வேத மந்திரங்கள் ஓத, பக்தர்கள், திருவிளக்கிற்கு, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.