பதிவு செய்த நாள்
01
செப்
2018
10:09
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த, ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், மூன்று நாட்கள் நடக்கும் பவித்திர உற்சவ விழா துவங்கியது. நேற்று காலை, முதல் நாள் உற்சவ விழாவில், லட்சுமி நரசிம்மர், சீனுவாச பெருமாளுக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. பட்டு நூல்களால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு யாக சாலையில், பட்டாச்சாரியார் முகுந்தன் தலைமையில், 25க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் வேதபாராயணங்கள் ஓதினர். மேலும், இரண்டு நாட்களுக்கு, விழா நடக்கிறது.