பதிவு செய்த நாள்
01
செப்
2018
11:09
குமாரபாளையம்: குமாரபாளையம் சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. குமாரபாளையம் திருவள்ளுவர் நகர், நடராஜா நகரில், மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் வளாகத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 28ல் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. சேலம் சுவாமிநாத சிவாச்சாரியார், சிவசங்கர சர்மா, குமாரபாளையம் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள், குழுவினர் யாக சாலை பூஜை விழாவை நடத்தினர். இதையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம், செட்டிபட்டி ஸ்தபதி சிற்ப சின்னசக்தி ஆலயப்பணிகள் செய்தமைக்காகவும், திருமுருகன் பூண்டி சிற்பி கிருஷ்ணசாமி, ஓமலூர் சிற்பி பிரகாஷ் ஆலய விக்ரகங்களை வடிவமைத்ததிற்காகவும் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடக்கின்றன.