பதிவு செய்த நாள்
03
செப்
2018
01:09
வீரபாண்டி: கந்தசாமி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முருகனுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரம், கண்ணன் அவதரித்த அஷ்டமி திதி, நேற்று ஒரே நாளில் வந்தது. இதை முன்னிட்டு, சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், காலையில் மூலவர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் கந்தசாமிக்கு, சிறப்பு பூஜை செய்து, வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து, வெள்ளி கவசத்தில் எழுந்தருளச் செய்தனர். மாலை, வள்ளி, தெய்வானையுடன், மயில் வாகனத்தில் கந்தசாமியை எழுந்தருளச் செய்து, கோவிலை வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசித்தனர். அதேபோல், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு, அபிஷேகம், அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலை, சப்பரத்தில், வள்ளி, தெய்வானை சமேத சண்முகரை, பக்தர்கள் தோளில் சுமந்து, கோவிலை வலம் வந்து வழிபட்டனர்.