பதிவு செய்த நாள்
11
செப்
2018
10:09
ஓட்டேரி: ஓட்டேரி, கந்தசாமி கோவிலில், தமிழ் வேத திருமுறை விழா, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஓட்டேரி, குயப்பேட்டை பகுதியில் உள்ள, கந்தசாமி கோவிலில், தமிழ் வேத திருமுறை விழா, 2ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை நடந்தது. இந்த விழாவின், கடைசி நாளான, நேற்று முன்தினம், தமிழ் வேதத்தை கொண்டாடும் விதமாக, தேவாரம், திருப்புகழ், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட திருமுறை புத்தகங்களை, யானை வாகனத்தில் வைத்து, வீதி உலா கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, காலை, 9:00 மணிக்கு, புதுப்பிக்கப்பட்ட, தமிழ் வேத பாராயண பக்த ஜன சபை திறக்கப்பட்டது. மேலும், திருமுறையின் சிறப்பம்சங்கள், பக்தர்களுக்கு எடுத்துரைக்கப் பட்டன. இவ்வாறு, பன்னிரு திருமுறையின் இசைவிழா, நேற்று முன்தினம் காலை, 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை நடந்தது. இந்த விழாவில், ஓட்டேரி, புளியந்தோப்பு, செம்பியம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.