பதிவு செய்த நாள்
11
செப்
2018
12:09
கோத்தகிரி:கோத்தகிரி தூய ஆரோக்கிய மாதா திருவிழா, சிறப்பாக நடந்தது. இந்த ஆலய த்தில், ஊட்டி மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில், கடந்த வாரம் கொடியேற்றத்துடன், விழா துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும், காலை, 8:00 மணி; மாலை, 5:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில், நற்கருணை ஆசீர்வாதம் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம்(செப்., 9ல்) ஆரோக்கிய மாதா திருவிழா சிறப் பாக நடந்தது. காலை, 6:30 மணி மற்றும் 7:45 மணிக்கு திருப்பலியும், காலை,9:00 மணிக்கு, மறைமாவட்ட குரு அமல்ராஜ் தலைமையில் கூட்டுதிருப்பலியும் நடந்தது.
மாலை,4:30 மணிக்கு ஜெபமாலை சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, ஆரோக்கிய மாதா ஆடம்பர தேர் பவனியுடன், தேவ நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி இடம் பெற்றது. விழாவில், கோத்தகிரி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர்.விழாவை ஒட்டி, மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர் உட்பட, பல்வேறு பகுதிகளுக்குசிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.