பதிவு செய்த நாள்
11
செப்
2018
12:09
திருச்சி: திருச்சி அருகே, தீ விபத்து ஏற்பட்ட கோவிலில், நித்திய வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. திருச்சி, அந்தநல்லூரில், 2,500 ஆண்டுகள் பழமையான, வடதீர்த்தநாதர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், அமாவாசை நாளான, நேற்று முன்தினம் (செப்.,9ல்) காலை பூஜை முடிந்து, கோவில் நடை சாத்தப்பட்டது. அன்று மாலை, கோவில் வளாகத்தில் இருந்த நெல் குடோனில் தீப் பிடித்தது. அதில், கோவிலில் இருந்த ரிஷப வாகனம் தீக்கிரையானது. ஆவணங்கள் வைக்கப்பட்ட அறைக் கதவு சேதமடைந்தது. தீ விபத்து காரணமாக, கோவில் தூண்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், நித்திய வழிபாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.