பதிவு செய்த நாள்
11
செப்
2018
12:09
ஊத்துக்கோட்டை:சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் நடந்த திருவிழாவில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஊத்துக்கோட்டை, சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம், உறியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். சமீபத்தில், கும்பாபிஷேகம் நடந்த நிலையில்,முதலாம் ஆண்டு உறியடி திருவிழா, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.தொடர்ந்து உறியடி திருவிழா துவங்கியது. உள்ளூர் வாலிபர்கள் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பின், சுவாமியின் உருவம் பொறித்த படம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.