தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2018 12:09
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் புரட்டாசி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில், புரட்டாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு, உற்சவர் சீனிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கொடிமரம் முன் எழுந்தருளினார். காலை கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி மேள, தாளம் முழங்க எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பின் பூஜைகள் நடந்தன. இன்று முதல் தினமும் காலையில் கிருஷ்ணர், ராமர், கஜேந்திர மோட்சம், ராஜாங்க சேவை, காளிங்க நர்த்தனம், சேஷசயனம், வெண்ணெய்தாழி அலங்காரங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தல்லாகுளம் பகுதிகளில் வலம் வருகிறார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.