பதிவு செய்த நாள்
13
செப்
2018
12:09
திருச்சி: திருச்சி மாவட்டம், குணசீலம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று, பிரம்மோற்சவ விழா துவங்கியது. ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, நேற்றிரவு, 7:00 மணிக்கு, பகவத் பிரார்த்தனை, புண்யாக வாசத்துடன் துவங்கியது. இன்று காலை, 9:30 மணிக்கு, விழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, தினமும் சிம்மம், ஹம்சம், கருடன், சேஷ வாகனம், யானை மற்றும் அனுமந்த வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். வரும், 16 முதல், மூன்று நாட்களுக்கு, சுவாமி முத்தங்கி சேவையில் அருள் பாலிக்கிறார். வரும், 19ல், திருக்கல்யாண உற்வம், 20ல், வெண்ணை தாழி அலங்காரமும் நடக்கிறது. 21ல், பிரம்மோற்சவ தேரோட்டம் நடக்கிறது. 23ல், புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது.