குமாரபாளையம்: குமாரபாளையம், 24 மனை மாரியம்மனுக்கு நவசக்தி யாகத்துடன், புதிய வெள்ளிக்கவசம் சாத்துபடி நடந்தது. குமாரபாளையம், தம்மண்ணன் சாலை, 24 மனை மாரியம்மனுக்கு, 18 கிலோ அளவிலான புதிய வெள்ளிக்கவசம் சாத்துபடி நடந்தது. முன்னதாக கோவில் முன் நவசக்தி யாகம் நடந்தது. ஈரோடு, சிவஸ்ரீ சுந்தரேச சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்தினர்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து, அம்மனுக்கு புதியதாக செய்யப்பட்ட வெள்ளிக்கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று அம்மனை வணங்கினர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.