பதிவு செய்த நாள்
15
செப்
2018
11:09
சென்னை:அமெரிக்காவின், சிகாகோ நகரில், இந்து மதத்தின் மேன்மைகளைப் பற்றி, விவேகானந்தர் உரையாற்றியதன், 125ம் ஆண்டு விழா, சென்னை, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
அமெரிக்கா சிகாகோ நகரில், 1893ல், சர்வ சமய பேரவையும் நடந்தது. அதில், இந்து மதத்தின் சார்பில், விவேகானந்தர் பங்கேற்றார்.அவர், சகோதர - சகோதரிகளே... என, உரையைத் துவக்கி, அனைத்து மதக் கருத்துகளையும், மதத்தினரையும், சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளும் பண்பு, இந்தியர்களுக்கும், இந்துக்களுக்கும் உள்ளதை விளக்கினார்.
மேலும், உலகின் பிரிவினைக் கருத்துகளுக்கு மாறாக, இந்திய பண்பாட்டின் வளத்தையும் விவரித்து, இந்தியாவின் மீதான, உலக பார்வையை மாற்றினார்.இதன், 125ம் ஆண்டு விழா, நல்லி குப்புசாமி தலைமையில், மயிலாப்பூரில் உள்ள, ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில், சமீபத்தில் நடந்தது. அதில், விவேகானந்தர் காண விரும்பிய நவீன இந்தியா; விவேகானந்தர் கூறிய தேச பக்தியும், தெய்வ பக்தியும்; சிகாகோசொற்பொழிவு களில் உள்ள மதமும், மனித நேயமும்; விவேகானந்தரும் சென்னையும் ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.
அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கலைமகள் ஆசிரியர் சங்கர சுப்ரமணியன், எழுத்தாளர், இசைக்கவி ரமணன் ஆகியோர் பேசினர்.நிகழ்ச்சியில், ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் செயலர் சத்யஞானானந்தர், மாணவர்கள்பங்கேற்றனர்.