பதிவு செய்த நாள்
20
செப்
2018
11:09
திருப்பரங்குன்றம்:மதுரை விளாச்சேரியில் நவராத்திரி பண்டிக்கைக்காக கொலு பொம்மைகள் தயாராகி வருகின்றன.
இங்கு 200 குடும்பத்தினர் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கு தகுந்தாற்போல் சுவாமி மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகள், 3 இஞ்ச் முதல் 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள், மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்து குடில்கள் களிமண், காகிதகூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட்டால் தயாரிக்கின்றனர். தற்போது நவராத்திரி விழாவிற்காக கொலு பொம்மைகள் தயாராகின்றன.
தொழிலாளி ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: கொலு பொம்மை தயாரிப்பில் குடும்பத் தினருடன் ஈடுபடுகிறேன். வழக்கமாக தயாராகும் பொம்மைகளுடன் வேதமூர்த்திகள், கார்த்திகை தீபம் மற்றும் கிருஷ்ணர் வதம் செட், புராணங்கள், கிராமிய விழாக்கள், விளையாட்டுகள் செட் ஆகியவை நாலரை அடி உயரம் வரை காகித கூழால் தயாரிக்கிறோம். சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு களிமண், காகிதகூழ் ஆகியவற்றால் மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம் என்றார்.