நத்தம்: நத்தம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் உலக நன்மை மற்றும் மழை வேண்டி மஹா ருத்ர ஹோம விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் விழா துவங்கியது. மாலையில் விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீருத்ர பாராயணம் உள்ளிட்ட முதற்கால யாக பூஜைகள் நடந்தது. இரவு தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜைகளையடுத்து மஹா ருத்ர ஹோமம், வாசுவதாரா ஹோமம் நடந்தது. பூர்ணாகுதி தீபாராதனை, கடம் புறப்பாடை தொடர்ந்து 11 வகை திவ்யாபிஷேகம், கடாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.