பதிவு செய்த நாள்
06
பிப்
2012
10:02
தேவகோட்டை : கண்டதேவி கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகிஅம்மன் கோயில், குங்குமகாளியம்மன் கோயில்,தேரடி கருப்பர் கோயில் உள்ளது.இக்கோயில்களின் கும்பாபிஷேக விழா ஜன. 30ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 9.20 மணிக்கு பிச்சைகுருக்கள் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் மூலஸ்தான கும்பத்திற்கு புனித நீரை ஊற்ற அனைத்து கோயில்களிலும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு நாட்டு அம்பலங்கள் ராமசாமி,பெரியகருப்பன், ராமசாமி, ரமேஷ் ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டனர்.
போலீஸ் கெடுபிடி: போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.பாஸ் இல்லாமல் கட்சி கொடிகளை கட்டி வந்த வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள், முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் ,அமைச்சர் கோகுல இந்திரா, திருப்பணி குழு நிர்வாகிகள் தலைவர் சோமநாராயணன் செட்டியார், செயலர் வெங்கிடாசலம் செட்டியார், பொருளாளர் சேவுகன் செட்டியார், ஒன்றிய தலைவர் செந்தில்நாதன்,கண்டதேவி ஊராட்சி தலைவர் முருகன்,நகராட்சிதலைவர் கற்பகம்,மாவட்ட செயலாளர் முருகானந்தம், மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ சொர்ணலிங்கம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தசரதன்,இளைஞரணி ஒன்றிய செயலாளர் பிர்லா கணேசன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டி,முன்னாள் நகராட்சி துணை தலைவர்கள் பாலமுருகன், பழனியப்பன், எல்.ஐ.சி. முகவர்கள் வெங்கடாசலம், செந்தில்நாதன், நகர சிவன்கோயில் டிரஸ்டி அழகப்பன், அன்பு, டி.டி.சுப்பிரமணியன், சொக்கலிங்கம், பஞ்சு வள்ளியப்பா மெட்ரிக் பள்ளி நிர்வாகி வள்ளியப்பன், பொறியாளர் ராமநாதன் ,கருணாநிதி, சண்முகம்,முத்தரசப்பன், வெள்ளையப்பன், மணிகண்டன், லயன்ஸ் துணை ஆளுநர் கணேசன்,ராஜா, நாராயணன் செட்டியார்,ரத்தினம் செட்டியார், பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம், வள்ளியப்பன், மெய்யப்பன்,பணியாளர்கள், கான்ட்ராக்டர் பஞ்சநாதன் மீனாட்சி கேபிள்ஸ், செட்டிநாடு லாக்கர்ஸ் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.