சுவாமி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெறுவதாகும். பொற்றாமரைக்குள் தீர்த்தவாரி, பன்னிரு நாட்கள் உற்சவம் நிகழும், சித்திரை நாள், பௌர்ணமியன்று
1. திருக்கல்யாணம் 2. திருத்தேர் உலா 3. ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைகைக்காட்சி இம்மூன்றும் மிக முக்கியமான வைபங்களாகும். பின்னால் இதனைப்பற்றி விரிவாகப் பார்ப்போம். இப் பன்னிரு விழா நாட்களிலும் மாசி வீதிகளில் ஸ்ரீ மீனாக்ஷி அம்மையும் சோம சுந்தரரும் திருஉலாச் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். இவ்விழா பண்டைய காலத்தில் திருமலை நாயக்கருக்கு முன் தை மாதத்தின் மக நட்சத்திரத்தில் துவங்கி மாசி மாதம் வரை மண்டல உற்சவமாக நடைபெற்று வந்துள்ளது. மதுரைக்கு மேற்கில் தேனூர் என்ற கிராமத்தில் வழியாகத் தவழ்ந்து வரும் இன்றைய வைகையின் கரையில் எழுந்தருளி காட்சி தந்துள்ளார். அக்காலத்தில் உழவர்களின் அறுவடை முழுவதும் முடிந்திராத நிலையினை எண்ணி அனைவரும் கலந்து கொண்டு மகிழ வேண்டுமென்று பெருநோக்கு கொண்ட திருமலை மன்னர் சித்திரை மாதத்திற்கு மாற்றி வைத்தார். ஸ்ரீ மீனாக்ஷி அம்மை திருமணத்தை இதில் மையப்படுத்தி ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், செங்கோல் பெறுவது, திக் விஜயம் எனப் பல்வேறு உற்சவங்களை சேர்த்துக் கொண்டாடும் சித்திரை திருவிழாவாகியது.
மேலும் அவ்விழாவில் பன்னிரெண்டு நாட்களும் அம்மையப்பர் நகரைச் சுற்றிய வண்ணம் இருப்பதும், மதுரை மாநகரே விழாக் கோலம் பூண்டு நிற்கும். கள்ளழகர் வருகையில் மக்கள் எதிர் கொண்டு வரவேற்கும் எதிர்சேவை தசாவதாரக் காட்சிகள், திருப்பரங்குன்றத்தில் இருந்து இளையவர் திருமுருகனின் வரவும் அவருடன் பவளக்கனிப் பெருமாள் உடன் வருவதும் சிறப்பான வைபங்கள் ஆகும்.
செங்கோல் வாங்கும் விழா சீதளக்குறிப்பேட்டில் கண்டபடி
செங்கோல் வாங்குதல் என்ற விழா திருமலை மன்னர் காலம் துவங்கி இன்றளவில் நடைபெற்று வருகிறது. சித்திரைத் திருவிழா எட்டாம் நாள் மாலை திருக்கோவில் ஆபரணப்பெட்டியில் இருந்து செங்கோலும் வைரக் கிரீடமும் எடுத்து வருவர். அம்மன் கோயில் ஆறுகால் பீடத்தில் அன்னை ஸ்ரீ மீனாக்ஷி யை எழுந்தருளச் செய்து பட்டாபிஷேக வைபவம் நிகழும். அதில் அன்னைக்கு வைர முடி அணிவித்து கையில் செங்கோல் ஏந்தியபடி அலங்காரம் செய்வர். பின் அன்னையிடம் அச்செங்கோலை திருமலை சவுரி நாயுறுகாரு என்ற திருமலை மன்னர் பெற்றுக்கொண்டு பட்டத்து யானையில் தன் பரிவாரங்களுடன் நகர்வலம் வருவார். திருக்கோவில் திரும்பிப்பின் அம்மையப்பனின் பள்ளியறை விசேஷ பூஜைகள் யாவையும் உடனிருந்து சிறப்பித்து, செங்கோல் உடன் மன்னர் அரண்மனை மஹால் வந்து சேர்வார். பின் அரண்மனையில் தன் சிம்மாசனத்தில் செங்கோல் வைத்து செங்கோலுக்கு முறையாக பூஜைகள் நடத்தி வைப்பார். மறுநாள் காலையில் முன்போல் பூஜைகள் முடித்து அச்செங்கோலை திருக்கோயிலில் சேர்ப்பார். திருமலை மன்னருக்கு பின்பு விஜய ரங்க சொக்க நாதர் காலம் வரை இவ்விதம் கி.பி. 1706 முதல் 1731 வரை நடந்து வந்திருப்பதாய் சீதளக்குறிப்போடு கூறுகிறது.
பின் ராணி மீனாக்ஷியம்மாள் காலத்தில் திருக்கோவிலைச் சார்ந்த பேரையப்பட்டர் செங்கோல் வாங்கியுள்ளார். அதன் பின் 1734-ல் சதாசிவப்பட்டர் வாங்கி திருக்கோவில் வளாகத்திலேயே வலம் வந்து பின் இறைவியிடம் சேர்ப்பித்தார். தற்காலத்தில் திருக்கோவில் தர்ம கர்த்தா குழுத்தலைவர் செங்கோல் வாங்குவது வழக்கப்படுத்தப்பட்டது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
21. மதுரை திருக்கோவில் திருவிழாக்கள் »