பதிவு செய்த நாள்
25
செப்
2018
03:09
1. மதுரைக் கோவிலின் முத்திரைத் திருவிழா என சித்திரைத் திருவிழா பெரும் சிறப்புப் பெறுகிறது. சித்திரைப் பெருவிழாவின் ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம் சிறப்பினுள் சிறப்பாகும். தந்த வேலைப்பாடுகள் கொண்ட அனந்தராயர் பல்லக்கில் அன்னை பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
2. தீர்த்தம் கொடுக்கும் விழாக்கள். "ஆறு ஆகும் சித்திரை, ஆடி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி
3. காப்பு கட்டி ரக்ஷா பந்தனம் நிகழும் விழாக்களும் "ஆறு ஆகும். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி
4. ஆடியில் ஸ்ரீ மீனாக்ஷி க்கு தனி விழா நடைபெறும்.
5. ஆவணியில் மாணிக்க வாசகப்பெருமான் விழா. இதில் இறையனார் நரிகளைப் பரிகளாக்கிய, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட, இவ்விரு முக்கிய புராண திருவிளையாடல் காட்சிகளின் விளக்க விழா நிகழும்.
6. கார்த்திகையில் சிவ பிரான் மஹா விஷ்ணு பிரம்மனுடைய இருவரின் கர்வம் தீர்க்க அடி-முடி காண முடியாத ஜோதிப் பிழம்பு தோற்றத்தைக் காட்டி நின்ற கோலம் அருளிய விழா
7. தை மாதத்தில் ராஜ உற்சவம் என்றழைக்கப்படும் தெப்பத் திருவிழா
8. மாசி மாதத்தில் மண்டல உற்சவம் 39 நாட்கள் கொண்டாடப்படும் பெருவிழா
9. ஸ்ரீ மீனாக்ஷி திருமணத்தின் முக்கிய வைபவங்களை நான்காகப் பிரித்து நான்கு மாதங்களில் கொண்டாடப்படும் விழாக்கள்
1. திருமணம் - சித்திரையில்
2. வசந்த விழா - வைகாசியில்
3. ஊஞ்சல் திருவிழா - ஆனியில்
4. முளைப்பாலிகை - ஆடியில்
10. புரட்டாசியில் நவராத்திரி விழா - அம்மை ஒன்பது அருட்திருக்கோலங்களில் காட்சி தரும் அழகிய விழா.
11. ஐப்பசி மாதத்தில் பவித்ரோற்சவம், அன்னையின் கோலாட்ட விழா, முருகப்பெருமானின் கந்த சஷ்டி விழா
12. மார்கழியில் தைலக்காப்பு திருவிழா
13. பங்குனியில் கோடை வசந்த விழா - உற்சவ விழா
விழா என்ற சொல் விழி என்ற சொல்லினின்று துவங்கியதெனலாம். விழிபொருள் பலவற்றை விளக்குவதாய் அமைந்த சொல் விழாவாகும். செயற்பெருமைகளை வேட்பு, பிரியத்துடன், வேட்பித்தல், வேள்விசெய்தல் எனக் கூறுதலும், பெருமைக்குரிய அல்லது தேவைப்படுகின்ற ஒரு விஷயத்தை, நிகழவிருப்பதை முன்கூட்டியே அறிவிக்கவோ அல்லது நிகழ்ந்து வரும் நிகழ்வுகளின் தொகுப்பை பலர் காண அறிய அல்லது உணரச் செய்யும் செயல்முறைக்கு மகுடம் சூட்டுவதே விழாவாகும்.