பதிவு செய்த நாள்
25
செப்
2018
03:09
தமிழ்ச் சங்க வரலாறிணை கூறப்புகுமுன் தமிழ்மொழியின் சிறப்பு பற்றி சிறிதேனும் கூறுதற்கடைமையாகும். எனினும் தமிழ்ப் பற்றி கூறுதற்கு தகைமை சிறிதேனும் கொளா நிலையில் விரிதற்கு அஞ்சி சுருக்க நிலையில் சங்க வரலாறு மட்டும் சாற்றத் தலைப்பட்டேன். மொழிஆய்வு 6-ல் பின் வரும்.
முதற்சங்கம்
இறையானார் களவியலுரை-ஆதாரப்படி சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன் குமரி முனையைப் பாண்டியமன்னர்களின் ஆட்சியில் 89 பாண்டியர்களால் காத்து வளர்க்கப்பட்டது. முதற்சங்கமாகும். இஃது ஆதிமதுரை என கூறப்படும் இடத்தில் இருந்தது. 4449 புலவர்கள் அதில் பங்குபற்றி இருந்தனர். அகத்திய முனிவர் பெருமான் அச்சங்கத்திற்கு தலைமையேற்று பெருமைபடுத்தியுள்ளார். அவரின்பெயரால் உருவான உன்னத நூல் அகத்தியம் ஆகும். 4440ஆண்டுகளுக்குப் பின் அவ்வாதி மதுரையை கடல் கொண்டிருக்கிறது.
இடைச்சங்கம்
வெண்டேசர்செழியன் என்ற பாண்டிய மன்னரால் கபாடபுரம் உருவாக்கப்பட்டு அன்நகரில் இரண்டாம் தமிழ்ச்சங்கத்தின் நிறுவி உள்ளார். இச்சங்கம் தொல்காப்பியர் எனும் தமிழ்கடலால் தலைமை தாங்க்பட்டு, 3700 புலவர்பெருமக்கள் குழுமத்தினரால் புகழ்படுத்தப்பட்டது. இக்கபாடபுரத்தினை 59 பாண்டியமன்னர்கள் வழிவழியாக ஆட்சிபுரிந்து தமிழ்ச்சங்கத்தினையும் போற்றிப் பராமரித்து வந்தனர். இவ்விதமே 3000 ஆண்டுகளுக்குப்பின் இரண்டாம் முறையாக அன்நாட்டை கடல் சூழ்ந்து அழித்தது. முதற்சங்கத்தின் அகத்தியம் என்ற நூல் முற்றிலும் அழிந்ததோடு தொல்காப்பியமும் இன்னபிற நூல்களும் எஞ்சின.
கடைச்சங்கம்
பிற்கால மதுரையில் முடத்திருமாறன் என்ற பாண்டியமன்னரால் மூன்றாம் தமிழ்சங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இச்சங்கத்தே தலைமை புலவராய் நக்கீரர் பெருமான் விளங்க 49 புலவர்களும் கூடி சங்கத்தினை வளர்ந்து வந்துள்ளனர். இறையனார் சிவபெருமான் 49-வது புலவர்களில் பெண்பாற் புலவர்களும் அடங்குவர். அவ்வையார், ஒக்கூர், மாசாத்தியார், வெண்ணிற்குயத்தியார் போன்றவர்களுடன் திருவாலவாயுடையார், பாண பத்திரர் பொருட்டுச் சேரமான் நாயினார்க்கு எழுதிய திருமுகப் பாசுரம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்து இறையனார் சங்கப் புலவர்களோடு இணைந்து தமிழாய்ந்ததை புலப்படுத்துவதாகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை கடைச்சங்கத்துப் புலவர்கள் படைத்தவை: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணெண்கீழ்கணக்கு முப்பத்தாறு நூல்களாகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் முன் தருமி என்ற புலவர்க்கு பொற்கிழி வழங்கப்பட்டது குறுந்தொகை 2 திருமுகப் பாசுரத் துவக்கம் மதிமலி புரிசை....... வரவிருப்பதுவே.
அகப்பெருளுக்கு இலக்கணம் வகுத்துயுள்ளார். அப்பனோடு சுப்பனும் முருகவேல் அகத்தியருக்கு உபதேசித்தார் என்றும் கூறுவர். சான்றாக அப்புலவர்பெருமக்களுக்கு சோமசுந்தரர் அர்த்தமண்டபமருகில் இன்றும் சன்னதி காணப்படுகிறது. இவர்கள் வழியே தொடர்ந்து முத்தமிழ் வளர்த்து புகழ்கொண்ட இத்தமிழ்ச்சங்கம் வழிவந்த முக்கிய பாண்டிய அரசர்கள் எழுவராவர். வடிவலம்பநின்ற பாண்டியன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பொற்கைப் பாண்டியன், ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன், உக்கிரப்பெருவழுதி, பூதப்பாண்டியன், வரகுணப்பாண்டியன் ஆகியோர் அவ் எழுவராவர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை இச்சங்கம் இருந்திருக்கிறதென வரலாறு விவரிக்கிறது. இதற்கடுத்து பாலிமொழி பேசுவோர் களப்பிரர்களால் இச்சங்கம் அழிந்துப்பட்டு ஏராணமான தமிழ் நூல்கள் அதில் எரியூட்டப்பட்டதென்றும் அதில் தப்பியவைகளே இன்றைய பழமை கூறும் இலக்கிய இலக்கண நூல்களாகும்.
நான்காம் தமிழ்ச்சங்கம்
14.1.1893-ல் நாட்குறிப்பில் காணப்பட்டப்படி ஸ்ரீ பாஸ்கரசேதுபதி அவர்கள் தூண்டுதல்படி திரு. பாண்டித்துரைத்தேவர் அவர்களால் 14.9.1901-ல் நான்காம் தமிழ்ச்சங்கம் துவங்கப்பட்டது. தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், அவர் செய்த மகத்தான பணிக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். தென்மதுரையைக் கடல்கொண்டதென்ற செய்தியைத் தருவது இறையனார் களவியலுரை, சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார்உரை ஆகியவையாகும்.