பதிவு செய்த நாள்
29
செப்
2018
11:09
உத்தமபாளையம்: உத்தமபாளையம் நகரின் மையப் பகுதியில்அமைந்துள்ளது யோக நரசிங்கபெருமாள் கோயில்.600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
மூலவர் விக்ரகம் கருங்கல்லால் ஆனது. தனது பக்தன் பிரகலாதனை அரக்கன் இரணியனிடம் இருந்து காப்பாற்ற, அவனை கொல்ல நரசிம்ம அவதாரம் எடுத்தார் சுவாமி. அரக்கனைவதம் செய்த பின், தனது கோபம் தீராமல் ஆவேசத்துடன் வந்தவர், அமைதியாக தனது கோபத்தை தணித்து அமர்ந்த இடம் இந்த யோகநரசிங்கபெருமாள் கோயில் என்கின்றனர் ஆன்மிகவாதிகள்.
வலது காலை உள்ளே வைத்து இடது கால்தெரியும்படி யோக முத்திரையுடன் அமர்ந்த கோலம், சபரிமலை ஐயப்பனை நினைவூட்டுகிறது. இக்கோலத்தில் யோகநரசிங்க பெருமாள் வேறு எங்கும் கிடையாது.இக்கோயிலில் மூலவர்சன்னதிக்கு இடதுபுறம் தாயார் மகாலட்சுமியும், இடது பக்கம் புதிதாக கட்டப்பட்ட ஆண்டாள் சன்னதியும் மிக நேர்த்தியாக உள்ளன. முன்புறம் கருடாழ்வார் மற்றும் கொடி மரம் உள்ளது. 1945 ல் முருக பக்தர் கிருபானந்த வாரியாரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதற்கு பின் சமீபத்தில் இந்த ஊரைச் சேர்ந்த ஓம் நமோ நாராயணா பக்த சபையால் திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பக்தர்கள் கூறுகையில், நோய், கடன் தொல்லை தீர,காரியங்களில் வெற்றி கிட்ட, கல்வியில் சிறந்து விளங்க, திருமணத் தடை நீங்க, செல்வம் கிடைக்க சுவாமி அருள்பாலிக்கிறார். வேண்டி னால் நினைத்தது நடக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்பது விசேஷம், என்றனர். கூடுதல் விபரங்களுக்கு: 98841 18298