பண்டசோழநல்லூர்: பண்டசோழநல்லூரில் மரகதவல்லி மல்லிகா அர்ச்சுணேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா வரும் 4ம் தேதி நடக்கிறது.
வரும் 4ம் தேதி இரவு 10.05 மணிக்கு, குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருட்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். பண்டசோழநல்லூர் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த மரகதவல்லி மல்லிகா அர்சணேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.
அன்று காலை 9 மணிக்கு குரு தட்சிணாமூர்த்திக்கு பரிகார பூஜைகளுடன் தீபாராதனை நிகழ்ச் சியும், இரவு 10.05 மணிக்கு குரு பெயர்ச்சிக்கான மகா தீபாராதனை நடக்கிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.